கட்டுவன் மேற்கு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!
Wednesday, August 29th, 2018
கட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் மக்கள் நீண்டநாள்களாக எதிர்கொண்டுவந்த குடிநீருக்கான பிரச்சினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வுகாணப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களுக்கு குடி நீர் விநியோகம் மேற்கொள்வதற்காக இணைக்கப்பட்டிருந்த குடிநீர் செல்லும் குழாய்கள் உடைவுற்று காணப்பட்டதை அடுத்து இப்பகுதிக்கான நீர் விநியோகம் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்தது.
குறித்த விடயம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் அவர்களின் கவனத்துக்கு குறித்த பகுதி மக்களால் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் குறித்த பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்தறிந்ததுடன் மக்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டதன் பிரகாரம் அவ்விடயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மக்களின் அத்தியாவசிய தேவையான குறித்த பிரச்சினையை கவனத்தில் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இவ்வருடத்துக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 1 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புனரமைப்ப செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


