ஜகத் ஜயசூரியைவை சந்திக்கும் ஜனாதிபதி!

Sunday, September 10th, 2017

சர்வதேச போர்க்குற்ற விசாரணை வழக்கை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு தொலைபேசிமூலம் உரையாடல் இடம்பெற்றுள்ளது.இதன்போது தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை – சவால்களை நேரில் எடுத்துரைப்பதற்கு சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமையவே சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஐ.நா.பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. 19ஆம் திகதியே உலக நாட்டுத் தலைவர்கள் பொதுத்தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தவுள்ளனர்.இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கைக்குழு எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்கா செல்லவுள்ளது.

இந்தப் பயணத்துக்கு முன்னர் ஜெனரல் ஜகத்துடன் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு நடத்துவார் என அரச உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.இறுதிக்கட்டப் போரின்போது வன்னிக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் அவரது சேவைக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிராக பிரேஸில், கொலம்பியா ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் போர்க்குற்ற விசாரணை வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.இவ்விவகாரம் இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: