கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை!

Friday, November 10th, 2023

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, அதிகபட்ச சில்லறை விலையில் சீனியை இறக்குமதி செய்வதால் 40ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நுகர்வோர் விவகார அதிகார சபையானது சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபாயை நிர்ணயித்துள்ளது.

அண்மையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சீனி இறக்குமதியாளர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

டொலர் அதிகரிப்பு மற்றும் ஒரு கிலோகிராம் சீனிக்கு 40 ரூபா நட்டம் ஏற்படுவதால் எதிர்காலத்தில் சீனி இறக்குமதியை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என இறக்குமதியாளர்கள் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறு நடந்தால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

எனவே, சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு இறக்குமதியாளர்கள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அமைச்சர் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: