உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் – நிதியமைச்சர்!
Wednesday, September 12th, 2018
சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், அந்நிலைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அளவில் எருபொருள் விலை அதிகரிக்கும் போது விலைச் சூத்திரத்திற்கு அமைவாக நாட்டிலும் எருபொருள் விலை அதிகரிக்கும் என்றும், சர்வதேசத்தில் விலை குறையும் போது அதன் பிரதிபலனையும் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
இ.போ.சபையுடன் இணைகின்றன கங்கேரியப் பேருந்துகள்!
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...
டெங்கு தொற்றால் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் உயிரிழப்பு - 48,963 பேருக்கு தொற்று உற...
|
|
|


