கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்: நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு !

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருள்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடிவதில்லை என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சில பொருள்களுக்கு அரசு உச்சபட்ச கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்துள்ளது. எனினும், இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட விலைகளில் பொருட்கள் விற்பனை வெய்யப்படுவதில்லை என்று அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட உச்சபட்ச விலைகள் கூட சந்தையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மீளவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தை வர்தமானியில் அறிவிப்பது நகைப்புக்குரியது என்று தெரிவித்துள்ளது. நாட்டில் 1கிலோ சீனி 100ரூபா முதல் 110ரூபா வரையிலும், நெத்தலி கிலோ 600 ரூபா முதல் 800 ரூபா வரையிலும், மைசூர் பருப்பு 180ரூபா முதல் 190 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அரசின் உச்சபட்ச கட்டுப்பாட்டு சில்லறை விலைகளை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே இந்தக் கோரிக்கையை ஊடகங்களின் ஊடாக அரசிடம் விடுத்துள்ளார்.
Related posts:
|
|