கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளவும் : நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விவசாயத்துறை அமைச்சர் பணிப்பு!

விவசாயிகளிடம் இருந்து கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளுமாறு நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தின் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை தற்போது சந்தைக்கு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில்வியாபாரிகள் நெல்லை குறைந்த விலையில் பெறுவதாக, விவசாயிகளினால் தன்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல்லை கட்டுப்பாடின்றி பெற்று கொள்ளுமாறு நெல் விநியோக சபையிடம் தாம் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீரகுறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மரண தண்டனைக்கான தடையை தொடருமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!
இந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது - நாக விகாரை விகாராதிபதி!
வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – மத்தியவங்கி அறிவிப்பு!
|
|