கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் தாழிறக்கம்: குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள்!

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று மாலை தாழிறங்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை ௲ குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. இந்த சம்பவத்தினால் குறித்த வீதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை : முதல் அந்தஸ்தை பெறப்போகும் யாழ். நகர்!
அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி!
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - சமுர்த்திப் பயனாளிகளிடம் அறவிட்ட பணத்தை கையாடிய சமுர்த்தி அலுவ...
|
|