கட்டார் முயற்சி – அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் விடுதலை செய்தது ஹமாஸ்!

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரண்டு அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள 200 க்கும் அதிகமான பணயக்கைதிகளில் இருவரை விடுதலை செய்துள்ளது.
கட்டார் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. யூடித் ரனானும் அவரது 17 வயது மகள் நட்டாலியாவும் தென் இஸ்ரேலில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்க சென்றிருந்தவேளை 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டது.
விடுதலை செய்யப்பட்ட பணயக்கைதிகள் இருவரையும் காசாவிலிருந்து இஸ்ரேலிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரித்தானியா விஜயம்!
இலங்கையில் தீவிரமடைந்து வரும் சிறுநீரகப் பாதிப்பு!
பாடசாலை சீருடை விநியோகம் ஜூலை 12 க்கு முன்னர் பூர்த்தி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|