கட்டவுட், பொருள்கள் பகிர்வுக்குத்  தடை – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, December 10th, 2017

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. தேர்தல் சட்டதிட்டங்கள் சம்பந்தமாக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. புதிய முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அது குறித்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டவுட்களை காட்சிப்படுத்தக் கூடாது என்றும் பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யக்கூடாது என்றும் வேட்பாளர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்வுகளில் வேட்பாளர்கள் பங்கேற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களாட்சி முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தல் சட்டம் மீறப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படும் பாடசாலைகள் - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை - கல்வி அமைச்சர் தெரிவி...
சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற தவறினால் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அ...