கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா – முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம் !

Friday, October 9th, 2020

கொரோனா அச்சம் காரணமாக மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மன்னார் ஆயர் இல்லப் பகுதியில் கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

மன்னார், பட்டித்தோட்டம் பகுதியில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றாளர் பணியாற்றிய மற்றும் தொடர்புகளை பேணிய இடங்கள், நபர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மன்னார் ஆயர் இல்லத்திலும் கட்டிட நிர்மாணப் பணிகளை குறித்த நபர் மேற்கொண்ட நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக ஆயர் இல்லம் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறி்தத கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கொரோனா அச்சம் என சந்தேகிக்கப்படுகின்ற பலருக்கு இன்று மேலதிக பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: