கட்சி அரசியல் மற்றும் கொள்கைகளை விட மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Monday, February 19th, 2024
கட்சி அரசியல் மற்றும் கொள்கைகளை விட மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானது என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து அடைந்த நாட்டை எந்தவொரு நபரும் பொறுப்பேற்காத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்று பொருளாதார ரீதியில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதனை உலக நாடுகள் ஆச்சரியமாக நோக்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வங்குரோத்து அடைந்த ஒரு நாடு 18 மாதத்தில் இவ்வாறானதொரு வளர்ச்சியை காண்பது இலகுவான விடயமல்ல எனவும், அன்று அனைவரையும் போன்று ஜனாதிபதியும் நாட்டை பொறுப்பேற்றிருக்காதிருந்தால் இது சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அனைத்து அரசியல் கட்சிகளையும், மக்களையும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்படுவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


