கட்சிகளிடமிருந்து பதில் இல்லை – மகிந்த தேசப்பிரிய!
Monday, May 25th, 2020
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது குறித்த கருத்தை வெளியிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இன்னமும் கட்சிகள் பதிலளிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் அனைத்து கட்சிகளையும் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா சூழலில் தேர்தலை நடத்துவது குறித்த தங்களின் நிலைப்பாடுகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவேண்டுகோள் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 சூழ்நிலையின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது குறித்த கருத்தினை கோரியதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
முதலைகளின் நடமாட்டத்தால் அம்பாறைபாண்டிருப்புமக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.
அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை - ...
|
|
|


