கடும் வெப்பம் : பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.சுகாதாரப் பணிமனை எச்சரிப்பு!

Thursday, April 4th, 2019

யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பத்தினுடனான காலநிலையில் பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு யாழ்.பிராந்திய சுகாதாரக் கல்விப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக வெப்பத்துடனான காலநிலையைச் சமாளிப்பதற்காக சிறுவர்கள், கர்ப்பவதிகள், வயோதிபர்கள் அவதானமாக இருப்பதோடு ஏனையவர்களும் இயன்றளவு உடற்செயற்பாடுகளைக் குறைத்து குளிர்மையான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும்

• நாளொன்றுக்கு 1½ – 2 லீற்றர் வரையான நீரை அருந்தல்

• இளநீர், பழச்சாறு போன்ற இயற்கைப்பானங்கள் பருகுதல்

• எமதுநாட்டுக்குரிய பழவகைகளை அதிகமாக உண்ணுதல்.

• கறுப்புநிற ஆடைகளை அணிவதைத் தவிர்த்தல்.

• உடலினை ஈரத்துணியால் அடிக்கடிதுடைத்தல், குளித்தல்

• காற்றோட்ட வசதியினை உறுதிசெய்தல்.

ஆகிய செயற்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் வெப்பமான காலப்பகுதியை சமாளித்துக்கொள்ள முடியும்  என அப்பிரிவு மேலும் தெரிவித்தது.

Related posts: