கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Monday, February 13th, 2017
நாட்டில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடற்கரையோர பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடுங்காற்று வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் வறட்சிக் காலநிலையில் ஓரளவு மாற்றத்தை இன்று இரவிலிருந்து சில தினங்கள் எதிர்பார்க்கலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா மகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் மழை தூறல் காணப்படும் என்றும் ஏனைய இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:
அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு!
ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை?
பாரம்பரிய விவசாய நாடான இலங்கை அதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு - நாட்டு மக்களுக்கும்...
|
|
|


