கடும் காற்று: ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவு சென்ற படகு கடலில் மூழ்கியது!

ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவுக்கு சென்ற படகு கடும் காற்று காரணமாக கடலில் மூழ்கியுள்ளது. குறித்த அனர்த்தம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் குறித்த படகில் வீதி திருத்தப் பணிகளுக்காக கிறவல் மண் ஏற்றப்பட்டு படகு புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் மூழ்கியுள்ளது.
குறித்த படகில் 10 பேர் பயணம் செய்திருந்த நிலையில் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மூழ்கிய படகை மீட்பதற்கு கடும் காற்றுக்கு மத்தியில் கடற்படையினரும் உள்ளூர் மக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கைக்கு பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை!
வீதி சட்டங்களை மீறுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை!
கிளி. காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!
|
|