கடும்காற்றினால் வவுனியாவில் பப்பாசி செய்கை அழிவு!

வவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் புதன்கிழமை காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.
குறிப்பாக வவுனியா நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த 600 இற்கும் மேற்பட்ட பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் ஆணையாளர் - சபாநாயகர் அவசர கோரிக்கை!
டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை - சிவில் விமான சேவை அதிகார சபை!
சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 100,000 இற்கு குறைந்த நிலையான வைப்பு வட்டி வருமானத்தின் வரி நீக்கம் - நிதி இர...
|
|