கடுமையான வெப்பநிலை 25 ஆம் திகதி வரை நீடிக்கும்!

Saturday, May 12th, 2018

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான காலநிலை மற்றும் சில பிரதேசங்களில் நிலவிவரும் உடலுக்கு உசிதமற்ற வெப்பநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டல திணைக்களத்தின் உயர் அதிகாரி ஜனக்குமார தெரிவித்துள்ளார்.

வடக்குஇ கிழக்கில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் வரட்சி நிலவி வருவதனால் வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடித்து வருவதாகவும் ஏனைய பகுதிகளில் வளிமண்டலத்தின் நீர் ஆவியாதல் காரணமாகவும் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதியின் பின்னர் மழை பெய்யும் எனவும் அதன் பின்னர் இந்த வெப்பத்துடன் கூடிய காலநிலை குறைவடையும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:


வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் - வெளிவிவகார அமைச...
மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அற...
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதா – சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ...