கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம்!
Tuesday, February 28th, 2023
மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதையும், கூடுதலான வசதிகளை அளிப்பதையும் நோக்கமாக கொண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு மக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக ஒரே நேரத்தில் 30 பேர் இந்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய மற்றும் குறுந்தகவல்கள் மூலம் போதியளவு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலை 8.00 மணி முதல் மாலை 4.45 வரை இந்த வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
யாழ் மாநகர முதல்வர் யார்? பரபரப்பில் யாழ்ப்பாணம்!
நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர் - பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டத்தை வலுப்படுத்துங்கள் - அபிவ...
|
|
|
எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சும...
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை - நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்...


