கடல் அலைகள் மூலம் மின்சாரம் பெற நடவடிக்கை!
Wednesday, October 11th, 2017
கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் பின்லாந்து நாடு பெற்றுள்ள அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் இலங்கையுடன் பரிமாறிக்கொள்வதற்கு முன்வந்துள்ளது.
இது தொடர்பிலான திட்டம் இலங்கையில் அடுத்தவருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு பின்லாந்து நாட்டின் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்தின் அதிகாரி ஜோன் லில்ஜிலன்ட் ( John Liljelund) முன்வந்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் இந்த தொழிற்சாலை பகுதிக்கு விஜயம் செய்தனர்.
Related posts:
பாரிய வெடிகுண்டு தெல்லிப்பழையில் மீட்பு!
பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...
|
|
|


