பாரிய வெடிகுண்டு தெல்லிப்பழையில் மீட்பு!
Wednesday, March 22nd, 2017
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லோடைப் பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியத் தயாரிப்பான பாரிய வெடிகுண்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(21) தெல்லிப்பழைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார்-25 முதல் 30 கிலோவிற்கும் இடைப்பட்ட எடையுடைய இந்தக் குண்டு கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குண்டு இருந்த இடத்தைக் குழந்தையொன்று தோண்டியதையடுத்து மேற்படி குண்டு வெளிப்பட்டுள்ளது. வெடிக்க வைப்பதற்கான தகடு குறித்த குண்டில் பொருத்தப்படாமையினால் நீண்ட காலம் குறித்த குண்டு வெடிக்காத நிலையிலிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ் !
கொரோனா முடக்கத்தின் எதிரொலி: வங்கிகளில் தங்க நகை அடகு வைப்பு அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி தெரிவிப்பு...
நாட்டின் 90 சதவீதமான பாடசாலைகளில் அபாயம் – எச்சரிக்கும் சுகாதார பிரிவு – தீவிர நடவடிக்கையில் கல்வி அ...
|
|
|


