கடமையை சரியாக செய்யாத பொலிசார் – நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான்!

Friday, November 17th, 2023

ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்வர் சதாக் கட்டளை பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பங்கள் தொடர்பாக கைது செய்யும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் கோவை சட்டத்தின் கீழ் பொலிஸார் சரியாக வழக்கு தொடராத காரணத்தால் குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்றில் ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸ் நிலையங்களினால் திருட்டுசம்பங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருடைய வழக்கு விசாரணை கடந்த புதன் கிழமை (15) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் எதிராக சரியான முறையில் பொலிஸார் வழக்கு தொடராத காரணத்தால் அவர்கள் குற்றவாளிகள் என நிருபிக்கப்படாதலால் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தார்.

குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் குறித்த நபர்கள் பல திருட்டுச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரிந்தும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சரியான பிரிவுகளில் வழக்கு தொடரவில்லை.

எனவே, இதன் காரணமாக பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் வெளியில் சென்று மீண்டும் குற்றவியலில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு காரணம் பொலிஸார் எனவே பொலிஸ் மா அதிபர் குறித்த பொலிஸ் நிலையங்களில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: