கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு
Tuesday, April 19th, 2016
அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 18.04.2016 அன்று மாலை திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த உத்தியோகத்தர் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் சேவைக்கு வருகை தந்துள்ள முதலாவது நாளிலேயே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வீரரத்ன எனும் பெயரையுடைய இவர், திடீரென ஏற்பட்ட இருதய நோயின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 27 வருடங்கள் பொலிஸில் சேவையாற்றியுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
வல்வெட்டித்துறையில் நடந்த இந்திர விழா: ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
இலங்கை - ஐக்கிய இராச்சியம் இடையே மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில்!
|
|
|
தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் - பல்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாளை பதவியேற்பு!
நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் – ப...


