கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை எட்டப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை !

Thursday, June 20th, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை வழங்கும் போது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற சர்வதேச தொழில் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன.

000

Related posts: