கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான  செயல்முறையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவுடன் இணைந்து இந்த முக்கியமான கூட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு ஜப்பானிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டில்  ஏற்பட்டுள்ள  பொருளாதார  நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக இரு தரப்பு கடன் வழங்குநர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஆரம்பத்தை இது குறிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாட்டில் கூடிய விரைவில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு   கடன்வழங்குநர்கள் முன்வழங்குவார்கள் என  எதிர்பார்த்துள்ளதாகவும்   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: