கணிதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்!

Wednesday, November 23rd, 2016

உயர் தரத்தில் கல்வி கற்ற வேண்டுமாயின் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பிலான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டில் அனைத்து பிள்ளைகளும் 13ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும் என்று எதிர்காலத்தில் இதற்காக உயர்தரம் பயில விரும்பும் மாணவர்களுக்கு 24 புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு கணிதம் கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

bimal

Related posts: