கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
Wednesday, September 6th, 2023
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் வாரத்தில் நிறைவு செய்ய வேண்டும். நிறைவு செய்யாவிட்டால் அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்றும், நாட்டை மற்றவர்கள் பொறுபேற்க தயங்கிய நேரத்தில் நான் பொறுபேற்று நாட்டை கட்டியெழுப்பியுள்ளேன். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 9 வீதத்தை நிச்சயமாக தருவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம்.
அந்த 9 வீதத்தையும் நான் தெரிவு செய்யவில்லை. கடந்த ஆட்சியில் தான் அதுவும் தீர்மானிக்கப்பட்டது ஆகவே அது பற்றி என்னிடம் பேச வேண்டாம். என்று தெரிவித்த அவர்,
இந்த சபையின் தலைவர் இரண்டு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவரிடம் கேளுங்கள். நான் அந்த விடயத்தில் தலையிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


