கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு!

Saturday, May 18th, 2019

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “2019 – மாத்ய அருண” என்ற விஷேட கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெறும் ஊடகவியலாளர்கள் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் பணிப்பாளர் ஊடகம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு “எஸிதிஸி மெதுர” இலக்கம் 163, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட,கொழும்பு – 5 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


புத்தாண்டு சுபநேர பத்திரம் – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனைப் பணிகளில் இருந்து விலகுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் - உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் பு...