கடன் தள்ளுபடியா? – பரவும் செய்திகளில் உண்மையில்லை என மக்கள் வங்கி அறிவிப்பு!
Thursday, August 29th, 2024
54 பில்லியன் ரூபா அறவிட முடியாத கடன் தொகையை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
இந்த செய்திகளை மக்கள் வங்கி முற்றுமுழுதாக மறுப்பதுடன், எந்தவிதமான கடன் தள்ளுபடிகளையும் தாம் செய்யவில்லை என மக்கள் வங்கி அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
அரசியல் ரீதியாக முக்கியம் பெறுகின்ற இக்கால கட்டங்களில் இவ்வாறான ஆதாரமற்ற செய்திகள் மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பிரசாரம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, இத்தகைய மோசடிக்காரர்களின் செயல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிவுறுத்தியுள்ளது.
எனவே மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்கள் வதந்திகளை புறக்கணித்து துல்லியமான,உண்மையான விபரங்களுக்கு மக்கள் வங்கியின் உத்தியோகபுர்வ தகவல் மார்க்கங்களின் ஊடாக வெளிப்படுகின்ற விபரங்களை மாத்திரம் நம்புமாறு மக்கள் வங்கி பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
000
Related posts:
|
|
|


