கடன் சலுகை கிடைக்கவில்லையெனில் உடன் முறையிடுங்கள் – மத்திய வங்கி அறிவிப்பு!
Friday, June 11th, 2021
வங்கி அல்லது வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய கடன் சலுகைகள் வழங்கப்படாத பட்சத்தில் அது குறித்து முறையிடுமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகைகளை வழங்குமாறு கடந்த மாதம் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தமக்கு உரிய கடன் சலுகைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய 011 24 77 966 எனும் இலக்கத்தை ஏற்படுத்தி மத்திய வங்கியின் வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவன பிரிவுக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மலேசியாவில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது!
பேருந்து சேவைகள் சீரின்மை: வடமராட்சி கிழக்கு மக்களுக்கு பாதிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள்...
|
|
|


