கடன்களை அறவிட நேரக் கட்டுப்பாடு!

Thursday, December 15th, 2016

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன் தொகையை அறவீடு செய்வதற்கு வீடுகளுக்குச் செல்வதற்கான நேர அளவை மத்திய வங்கி கட்டுப்படுத்தியுள்ளது. காலை 8 மணிக்கும் மாலை 5மணிக்கும் இடையே மட்டுமே கடன் அறவீடுகளை மேற்கொள்ள வேண்டும் என வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்தும் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

கடன் அறவிடு தொடர்பாக நிதி நிறுவனங்களின் பணியாளர்கள் இரவு. அதிகாலை வேளைகளில் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதாலும், சம்பந்தப்பட்டவர்களின் மனம் நோகும் வகையில் நடந்து கொள்வதாலும், குடும்ப உறவுகள் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன, தற்கொலைகளும் இடம்பெற்றுள்ளன. அதைக் கருத்தில் கொண்டே மத்திய வங்கி கடன் அறவீடும் விடயத்தில் நேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது என்ற மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

201606291343150234_Banks-will-not-take-effect-for-11-days-in-July_SECVPF

Related posts: