சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்ப – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தகவல்!

Thursday, December 21st, 2023

இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஜனவரிமுதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்குகள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக இருபத்தி ஆறு கோடியே எழுபத்தாறு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று நாற்பத்து எட்டு ரூபாயை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக உரிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்ட சிறப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,185 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: