கடனை தீர்ப்பதற்கு இலங்கைக்கு பாரிஸ் கிளப் நாடுகள் 25 வருடகால அவகாச முன்மொழிவு !

Sunday, December 4th, 2022

இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முன்னர், கடன் வழங்குநர் நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை தீர்ப்பதற்காக 10 வருட கால அவகாசம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு என்பவற்றை பாரிஸ் கிளப் நாடுகள் முன்மொழிந்துள்ளன.

இந்தநிலையில், இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியுள்ள சீனா மற்றும் இந்தியான ஆகிய நாடுகளுடன் பாரீஸ் கிளப் நாடுகள் சம்பிரதாயமாக சந்திப்புக்களை நடத்தவுள்ளன.

அதேநேரம் இலங்கையும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் கடன் மறுசீரமைப்பு விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டாலும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள 2023 மார்ச்சில் நடைபெறவுள்ள அதன் நிறைவேற்றுக்குழு கூட்டத்துக்காக இலங்கை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அடுத்த மார்ச் மாதம் வரையில் பொருளாதார பிரச்சினையை தீர்க்க இலங்கைக்கு இடைக்கால நிதி தேவைப்படும்.

இந்தநிலையில், இலங்கை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடையும் முன்னர் மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி கலாவதி அவர்களால் வறிய மாணவர...
பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் அனுமதியளிக்கப்படாது - தொழில...
பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் - இராஜாங்க அமைச்சர்...