கடந்த 7 மாதங்களில் 282 கொலைகள், 992 பாலியல் வல்லுறவு, 1779 கொள்ளை!

2015 ஆம் ஆண்டில் ஜீலை இறுதி வரையான ஏழு மாதங்களில் 282 கொலைச் சம்பவங்களும் 1779 கொள்ளைச் சம்பவங்களும் 992 பாலியல் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. 2017 ஆம் ஆண்டில் மொத்தம் 452 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த வருடமும் கொலைச் சம்பவங்கள் சுமார் அதே எண்ணிக்கையில் விகிதத்திலோ அல்லது கூடுதலாகவோ நிகழ்ந்துள்ளன.
இந்த வருடம் வரையில் மொத்தம் 20,826 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதுடன் அவற்றில் 14,272 குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் மொத்தம் 35,978 குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 28,015 குற்ற முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 இல் ஜீலை வரையில் குற்றச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் குறைவாகவே பதியப்பட்டுள்ளன.
இந்த வகையில் 2018 இல் குற்றச் சம்பவங்கள் சுமார் 30 வீதம் குறைவடைந்துள்ளன.
2018 இல் ஜீலை இறுதிவரை நிகழ்ந்துள்ள 282 கொலைச்சம்பவங்களில் 28 கொலைகள் துப்பாக்கிச் சூடு மூலம் நிகழ்ந்த கொலைகளாகும். இவ்வாறு இதுவரையில் துப்பாக்கிகள் உட்பட 711 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
|
|