கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு – நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு!
Wednesday, October 25th, 2023
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
அதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
அவ்வாறு பாலியல் துஷ்ப்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில், 22 பேர் தற்போது கர்ப்பிணிகளாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் குறைந்தது 41 வீதமானவை பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு செப்டெம்பரில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


