கடந்த பத்து ஆண்டுகளில் டெங்கு நோயின் தாக்கம் மிக குறைவான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு பதிவானது!

கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஆகக்குறைந்த டெங்கு நோயாளர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு 30 ஆயிரத்து 802 டெங்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 800 ஆக பதிவாகி உள்ளது.
அதே வேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டில் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் மீள பரவும் அபாயம் உள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்’கது.
Related posts:
சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்
வீதியில் செல்பவர்களை வளர்ப்பு நாய் கடித்தால் பொலிஸில் முறையிடலாம் - பொலிஸார் !
முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை - வர்த...
|
|