கடந்த காலத்தை மறந்து எம்முடன் இணைந்து பயணியுங்கள் : தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச!

Friday, November 27th, 2020

நாட்டில் ஒரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கவில்லை, தமிழ் மக்களும் எமது மக்களே, அவர்களுக்கான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்கவே நினைக்கின்றோம்.

கடந்த காலத்தை மறந்துவிட்டு தமிழர்கள் எம்முடன் ஒன்றிணையுங்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை முன்னெடுத்தாக வேண்டும். வறண்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் குடிநீர் இல்லாது நோய்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வடக்கு மாகாணம் அதிக அச்சுறுத்தலில் உள்ளதென்பதையும் கருத்தில் கொண்டே மன்னார், வடமாராச்சி நீர் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டுள்ளமை சகல மக்களுக்குமான பயன்களை பெற்றுக்கொள்ளவே தவிர எந்தவொரு இனத்தையும் தண்டிக்கவோ நிராகரிக்கவோ அல்ல. சகல மக்களுக்கும் ஒரே மாதிரியான சலுகளை பெற்றுக்கொடுக்க நினைக்கிறோம்.

தமிழர்கள் எமது மக்கள். சகல மக்களுக்கும் இடங்களை பெற்றுக்கொடுப்போம். இதில் ஒரு இனத்திற்கு மட்டும் முன்னுரிமை அல்ல. அவ்வாறு நடந்தவற்றை மறந்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்.

யாழ்பாண மக்கள் மிகவும் அதிகமான கஷ்டபடுகின்றனர். அவர்களின் பொருளாதாரதையும் முன்னேற்ற நாம் அனைவரும் ஒன்றினைவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: