கடந்த ஆண்டை விட 16.5 வீதத்தால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Thursday, July 29th, 2021

இலங்கையில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியால் 127.8 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த வருமானம் கடந்த ஆண்டை விட 16.5 வீத அதிகரிப்பானதென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருமானத்தை ஈட்டுவதற்காக, ஜனவரிமுதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நாடு 136 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ள அதேவேளை 2020 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 124 கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதிகளில் தேயிலை பக்கெட்டுகள், தேயிலைப் பொதிகள், உடனடித் தேயிலை மற்றும் பச்சை தேயிலை என்பனவும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: