கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்!
Thursday, January 10th, 2019
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
அவர்களில் 1215 ஆண் கைதிகளும் 84 பெண் கைதிகளும் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 1299 கைதிகளுள் 789 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தமது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 476 பேர் இருப்பதாகவும், அவர்களில் 426 பேர் ஆண்கள் என்றும் 50 பேர் பெண்கள் என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
Related posts:
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
க.பொ.த சாதாரண தரம் – பரீட்சாத்திகள் 5 பேரின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்!
இலங்கையில் ஒரே நாளில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு !
|
|
|


