கச்சதீவை மீண்டும் உரிமைகோரும் எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை யாழ்.வருகை தந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் தெரிவிப்பு

Saturday, January 7th, 2017

கச்சதீவை மீண்டும் உரிமை கோரும் எந்த எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை என்று இந்திய வெளிவிவகார செயலாளர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தபோது ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்திய மீனவர்கள் இலங்கையின் வடகடல் பகுதிக்குள் வருவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க இந்தியா இணங்கியுள்ளது. இதனடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என்பதால் இந்திய மீனர்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்றார்

735763_557898704237744_1055045580_o

Related posts: