ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு – 3000 ரூபாவை வழங்க அமைச்சரவை அனுமதி!
Thursday, July 25th, 2024
அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி வேதன முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுமார் 7 இலட்சம் பேர் நன்மையடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரச சேவையில் நிலவும் வேதன முரண்பாடுகள் தொடர்பில் ஆராயத் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழு முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இணக்கம் எட்டப்பட்டதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


