ஓய்வு பெறவுள்ளோருக்கு தீர்வை வரி முறையில் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிப்பு!
 Friday, March 31st, 2017
        
                    Friday, March 31st, 2017
            
2018ம் ஆண்டு முதல் ஓய்வு பெறவுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, தீர்வை வரி முறையில் வழங்கப்படும் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இந்நிதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் தரத்திலுள்ள சிரேஸ்ட அதிகரிகளுக்கு தீர்வை வரி முறையில் வாகனங்களை பெற்றுக் கொடுப்பதற்காக 30,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை 45,000 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தரத்திலுள்ள அதிகரிகளுக்கு 27,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை, 40,000 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரத்திலுள்ள அதிகரிகளுக்கு 27,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை 35,000 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரச சேவையில் தற்போதுள்ள 90 வீதமான அமைச்சுக்களின் செயலாளர்கள் எதிர்வரும் ஆண்டு ஓய்வு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        