ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் தொழிலுக்கு செல்ல முடியாது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, November 5th, 2022

சுற்றுலா விசா மூலம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் உத்தரவிற்கு  அமைய மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு செல்வோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்து வருவதாகவும் அது தொடர்பில் ஊடகங்கள் மூலமும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வோர் முறைப்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அந்த பணியகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: