ஓகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் நம்பிக்கை!
Thursday, June 10th, 2021
எதிர்வரும் ஜூலைமுதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நிலைமையை நெருங்க வேண்டுமாயின் இலங்கை மக்கள் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அவர் இதற்காக உலகில் தடுப்பூசிகளை தயாரிக்கும் நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
அத்துடன் உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் ஸ்புட்னிக், ஒக்ஸ்பேர்ட் எஸ்ராசேனிகா, பைசர் பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் தேவையான வகையில் ஒப்பந்தங்களை செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும். எவ்வாறாயினும் நாட்டு மக்கள் வரையறைகளுடன் கூடிய வாழ்க்கை பழக்கங்களை கொண்டு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவர் இன்னும் மூன்று மாதங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. எனினும் வைரஸ் உருமாறும் நிலைமை மற்றும் அதற்கு தடுப்பூசிகள் ஈடுகொடுக்கும் தன்மைக்கு அமைய இது மாறுபடலாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


