ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிப் பாசடாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவும் முதலாவது கட்டத்தின் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
குசல் பெரேராவை வாழ்த்திய ஜனாதிபதி !
விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் - சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!
வேலணையில் சிறப்பாக நடைபெற்ற பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!
|
|