ஒரு விடயத்தை மட்டும் மையப்படுத்தியதாக இலங்கை – இந்திய உறவு அமைந்துவிடக்கூடாது – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
Friday, September 24th, 2021
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் மையப்பட்டு இருக்கக் கூடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸை அவர் சந்தித்திருந்தார். இதன்போது அவர் இந்த விடயத்தைக் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யுத்தத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது அமைச்சர் ஜி எல் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் எனவும் யுத்தகால பிரச்சினைகள் உரிய வகையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த ஒரு விடயத்தை மாத்திரம் மையப்படுத்தி இலங்கை இந்திய உறவு அமைந்துவிடக் கூடாது எனவும், விரிவான பல்வேறு விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலவ வேண்டும் எனவும் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


