ஒரு தேசிய இனத்தின் மீட்சிக்கு கலை இலக்கியப் படைப்புக்களும் பங்காற்றவேண்டும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, February 5th, 2017

ஒரு கலைஞனுக்கு சமூகத்தில் வழங்கப்படும் கௌரவமே ஒரு இன சமூகத்தின் வரலாறுகள் துல்லியமாக செதுக்கப்படுவதற்கு உந்துசக்தியாகின்றது. அந்தவகையில் எமது தேசத்து கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களது கலைப்படைப்புக்களை வெளியுலகுக்கு கொண்டு செல்லும் களத்தையும் அமைத்துக் கொடுப்பதுமே எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நோக்கம் என கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற கலைஞர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கலைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடியபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையிவல் –

ஒரு தேசிய இனத்தின் மீட்சிக்கு கலை இலக்கியப் படைப்புக்களும் தமது பங்கை ஆற்றவேண்டும். வெறுமனே அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் மட்டும் எந்தவொரு இனத்தின் விடுதலைக்கும் முழுமையாக பங்காற்றப்போவதில்லை.

image-0-02-03-a8ab60792796b483666c6b3e6b1af4a4e8276a8b7581a25100740b4188363d5b-V

உலகெங்கும் இதுவரை கண்ட உரிமைப் போராட்ட வரலாறுகளின் வெற்றிகளுக்கு கலை இலக்கியப் படைப்புக்கள் தமது தனித்தவமான பங்களிப்பை செலுத்தி வந்திருக்கின்றன. எமது தேசத்திலும் போருக்கு முந்திய கலை இலக்கியங்கள், போர்க்கால கலை இலக்கியங்கள் போருக்குப் பிந்திய கலை இலக்கியங்கள் என தொடர்ச்சியான கலை இலக்கியச் செயற்பாடுகள் இருந்துவந்துள்ளன.

கலை இலக்கியப் படைப்பாளிகள் சூழலுக்கு ஏற்றவாறு தமது படைப்புக்களை உருவாக்கவேண்டிய கட்டாயங்களும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன.

இன்றைய சூழலில் சமூகம் சார்ந்து படைப்புக்களை உருவாக்க முடிந்த சூழல் ஒன்று கனிந்திருக்கின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் மனங்கள் தோறும் கலை இலக்கியப் படைப்புக்கள் மாற்றங்களை உருவாக்கவேண்டும். ஒரு விழிப்பணர்வுகளை உருவாக்கவேண்டும். முற்போக்கு எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

image-0-02-03-236a5d37706048e3d88a1291860e8b437766e39ae5e96bbdbd4096a0d295f6fe-V

ஒரு இலக்கு நோக்கி மக்களை வழிநடத்திச் செல்வதற்கு சகல கலை இலக்கியப் படைபுக்களும் பக்கதுணையாக இருக்கவேண்டும். ஆகவே படைப்பாளிகளாகிய நீங்கள் வலிமையுள்ளவர்களாக மட்டுமன்றி

தீரா இலட்சிய வேட்கை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இதே வேளை கலைஞர்களோடு ஒட்டியிருக்கும் வறுமை அகற்றப்பட வேண்டும். அவர்களுக்கான வசதி வாய்ப்பக்களும் உருவாக்கப்பட வேண்டும் அதற்காக நாம் உங்களுக்கு கரம் கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

image-0-02-03-999d240c5535ec57dd6e8f175dfade5034704c7b58e87ac8583a8d438f078cc3-V

Related posts: