ஒரு இலட்சத்து ஆயிரதத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தமாக 2 ஆயிரத்து 882 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 827 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர். 55 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இதன்படி மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் தொற்று உறுதியான 30 ஆயிரத்து 797 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் 2 ஆயிரத்து 29 தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவால் நாளாந்தம் வெளியிடப்படும் புதுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்த 391 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|