ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் – சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023

”அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ‘ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின்  புழக்கத்தை நாட்டில்  முற்றிலுமாக அரசு நிறுத்தும் ”.என சுற்றுச்சூழல் அமைச்சர்  நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபைகளின் 5 ஆவது மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பல்வேறு வகையான ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு தடை விதித்து  அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

“எங்கள் அரசாங்கம் ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், இந்த பூலோகத்தை அச்சுறுத்தும் பொருட்களின் சுழற்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தி, குறைத்துவிடுவோம் என நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: