உருளைக் கிழங்கு செய்கைக்கான நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் – விவசாய அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Sunday, February 19th, 2023

உருளைக் கிழங்கு செய்கைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தை வேறு பயிர்ச்செய்கைக்கோ அல்லது கட்டட நிர்மாணத்துக்கோ பயன்படுத்த வேண்டாம் என விவசாய அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உருளைக்கிழங்கு பயிரிடப்படும் நிலத்தில் ஏனைய பயிர்களை பயிரிட்டுவதால் பூஞ்சை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் சிறுபோகத்தில் 2 ஆயிரத்து 700 ஹெக்டேயரிலும் பெரும்போகத்தில் ஆயிரத்து 881 ஹெக்டயாரிலும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனூடாக 14,400 மெற்றிக் டன் உருளைக்கிழங்கை அறுவடைச் செய்ய முடியும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

எனினும், மேலும் 154 மெற்றிக் டன் உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வருடாந்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் மெற்றிக் டன் உருளைக் கிழங்கு அவசியம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: