ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் – மக்களே அவதானம் என எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு!
Wednesday, February 2nd, 2022
ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதற்கமைய, மருத்துவ தரவுகளின்படி ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகளாக தலைவலி, குளிர், தொண்டை வலி, மூச்சு திணறல், காய்ச்சல் மற்றும் நிமோனியாவின் அறிகுறிகள் என்பனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
எனவே, மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியசாலையை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த 31 ஆம் திகதி இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்
கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவல் வீதத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு, ‘சமூக பரவல்’ என்ற வார்த்தையின் வரையறையின்படி அதை சரியாக உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாறுபாடு அந்த நிலையை அடைந்திருந்தால், பொதுமக்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம், தற்போது யாரும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றும் முகமூடி அணிவதைத் தவிர, மற்ற சுகாதார வழிகாட்டுதல்கள் தற்போது பின்பற்றப்படவில்லை எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திக் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


